ADDED : மார் 31, 2013 10:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உன் பொக்கிஷம் எங்கு இருக்கிறதோ அங்கு தான் உன் இருதயமும் இருக்கிறது.
* அறிவாளியின் இருதயம் அவனது வலது கைப்புறம் இருக்கிறது. முட்டாளின் இருதயமோ அவனது இடது கையில் இருக்கிறது.
* கடவுளே! என்னிடம் சுத்தமான இருதயத்தைச் சிருஷ்டியும். என்னுள்ளே நேரானதொரு உயிர்ப்பை புதுப்பியும்.
* எல்லாவற்றிற்கும் மேலாக உன் இருதயத்தைக் காப்பாற்றிக் கொள். அதனின்றுதான் ஜீவ ஊற்றுகள் கிளம்புகின்றன.
* வெளிப்படாத மறைபொருளும் இல்லை. வெளிவந்து பிரசித்தமாகாதபடி ரகசியங்களை காக்கப்பட்டதும் எதுவுமில்லை.
* வாயடக்கமாயிரு. உதடுகளை அதிகம் திறக்காதே. உதடுகளுக்குத் தூரமாயிரு.
* கொழுத்த எருதுக்கறியைப் பகையோடு உண்பதைவிட, அன்பு இருக்குமிடத்தில் வெறும் இலைக்கறியை உண்பது நல்லது.
- பைபிள் பொன்மொழிகள்